2026 பிப்ரவரியில் முதன்மை மற்றும் வணிக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி சாதனை அளவாக 20.49 மில்லியன் டன்னாக இருந்தது. இவற்றிலிருந்து 17.72 மில்லியன் டன் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிதியாண்டு 2025-26-ல் பிப்ரவரி வரை இந்த சுரங்கங்களின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 11.58 சதவீதம் அதிகரித்திருப்பதோடு மொத்த விநியோகம் 6.78 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவனம் மற்றும் வணிக ரீதியான நிலக்கரி சுரங்கத்தின் முழு திறனையும் வெளிக்கொண்டு வரும் உறுதிப்பாட்டை நிலக்கரி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. நிலையான உற்பத்தி அளவுகளை பராமரித்தல், விநியோக சிக்கல்களைக் குறைத்தல், நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளை எதிர்கொள்ள இந்தத் துறையின் முக்கியமான பங்களிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
திவாஹர்
