இந்தியா – யுஏஈ இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியான மவுண்டைன் கார்டியன் 2026 உத்தராகண்ட் மாநிலம் சௌபாட்டியாவில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. 2026 அக்டோபர் 5 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்பயிற்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் போர்களில் கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன், பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பயிற்சியில் இரு நாட்டு ராணுவங்களைச் சேர்ந்த மொத்தம் 92 வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். இந்திய ராணுவப் பிரிவில், பைரவ் பட்டாலியன் வீரர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவப் பிரிவின் மலைப்பகுதியைச் சேர்ந்த தரைப்படை பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இருநாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளும், வீரர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இப்பயிற்சியில் கூட்டுத் திட்டமிடல், உத்திசார்ந்த பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி, கண்காணிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், ட்ரோன் செயல்பாடு, உடல் வலிமை பயிற்சி, தடை தாண்டும் பயிற்சி, ஒருங்கிணைந்த களப் பயிற்சி ஆகியவற்றில் வீரர்கள் ஈடுபடுவார்கள்.
இப்பயிற்சியில் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள், சவாலான மலைப்பகுதிகளில் செயல்படுவதற்குத் தேவையான உத்திகள், தொழில்நுட்பங்கள் நடைமுறைகள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதும் இடம்பெறும்.
திவாஹர்
