விமானப்படைத் தளபதி (CAS) ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ஜனவரி 8, 2026 அன்று டெல்லி கான்ட்டில் உள்ள தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) குடியரசு தின முகாமை (RDC) பார்வையிட்டார்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த என்.சி.சி கேடட்கள் வழங்கிய ‘கௌரவ மரியாதை’யை அவர் பார்வையிட்டார், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் பிலானியில் உள்ள பிர்லா பாலிகா வித்யாபீடத்தின் பெண் கேடட்களின் இசைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்களில் 17 என்.சி.சி இயக்குநரகங்களின் கேடட்களால் தயாரிக்கப்பட்ட ‘கொடிப் பகுதியை’ விமானப்படைத் தலைமைத் தளபதி ஆய்வு செய்தார், அதன் பிறகு அவர் என்.சி.சி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ ஐப் பார்வையிட்டார்.
திவாஹர்
