நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சந்தால் இனத்தவர்களுக்கென்று தனி மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் இருப்பதாகக் கூறினார். இருப்பினும், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சந்தாலி மொழிக்கான எழுத்துமுறை இல்லாததால், ரோமன், தேவநாகரி, ஒடியா மற்றும் பெங்காலி போன்ற பல்வேறு எழுத்துமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எழுத்துமுறைகளில், பல சந்தாலி வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை. 1925 ஆம் ஆண்டில், பண்டிட் ரகுநாத் முர்மு ஓல் சிக்கி எழுத்துமுறையை உருவாக்கினார். அப்போதிருந்து, இந்த எழுத்துமுறை சந்தால் அடையாளத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது.
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25, 2025 அன்று, ஓல் சிக்கி லிபியில் எழுதப்பட்ட சாந்தாலி மொழியில் இந்திய அரசியலமைப்பை வெளியிடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். இப்போது சாந்தாலி மொழி பேசும் மக்கள் தங்கள் தாய்மொழியிலும் ஓல் சிக்கி லிபியிலும் எழுதப்பட்ட அரசியலமைப்பைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேறு எந்த மொழியிலும் கல்வி பெறுவதைத் தவிர, தாய்மொழியான ஓல் சிக்கி லிபியில் சந்தாலியைக் கற்றுக்கொள்வதும் சந்தாலி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். எழுத்தாளர்களும் மொழி ஆர்வலர்களும் சந்தாலி மொழியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பாடுபடுவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மனதில் கொண்டு மக்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை சந்தாலி மக்கள் மற்றும் பிற பழங்குடி சமூகங்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்
ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .

திவாஹர்