ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்ஸல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மத்தியக் குழு உறுப்பினர் கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நக்ஸல் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பயணத்தில், குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், மத்தியக் குழு உறுப்பினர் கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம், ஒடிசா மாநிலம் நக்ஸல் தீவிரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் நிலையில் உள்ளது. 2026 -ம் ஆண்டு மார்ச் 31 -ம் தேதிக்கு முன்னதாக, நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.”

Leave a Reply