மிகத்துல்லியமிக்க தாக்குதல் திறன் கொண்ட இரண்டு போர் உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆப்டெல் நிறுவனம் சாஃப்ரான் மின்னணு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மிகத்துல்லியமிக்க தாக்குதல் திறன் கொண்ட இரண்டு போர் உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனரக துப்பாக்கிகள், வான் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணைகள் மற்றும் ரேடார்களில் பயன்படுத்தப்படும் சிக்மா 30என், கனரக துப்பாக்கி மற்றும் ட்ரோன் எதிர்ப்பு உபகரணங்களுக்கான சிஎம்3-எம்ஆர் ஆகியவை இந்த இரண்டு போர் உபகரணங்கள் ஆகும்.

புதுதில்லியில் 2025, டிசம்பர் 22 அன்று பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய ஆப்டெல் நிறுவனத்தின் முதன்மை மேலாண் இயக்குநர் திரு துஷார் திரிபாதி, சாஃப்ரான் மின்னணு மற்றும் பாதுகாப்பு நிறுவன உலகளாவிய வர்த்தக பிரிவு தலைவர் திரு அலெக்சாண்டர் ஜீக்லர் ஆகியோர் கையெழுத்திட்டனர்

Leave a Reply