இந்தியா – மாலத்தீவு கூட்டு ராணுவப்பயிற்சி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. ஈக்குவெரின் என்றழைக்கப்படும் இக்கூட்டுப் பயிற்சி 2025 டிசம்பர் 2 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பில் கர்வால் ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்நத 45 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதே எண்ணிக்கையிலான மாலத்தீவு ராணுவ வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். 2 வாரங்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில், தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல், கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எம்.பிரபாகரன்
