மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள திட்டங்களுக்கு 800 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று கடன்களுக்கான ஒப்பந்தங்களில் இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) நேற்று கையெழுத்திட்டன.
கடன்களை இறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் ADB உடனான ஈடுபாடு, பொருளாதார விவகாரத் துறையின் இணைச் செயலாளர் (ADB & ஜப்பான்) தலைமையில் நடைபெற்றது, அவரது வழிகாட்டுதலின் கீழ் கடன் கையொப்பமிடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, விவசாய சூரிய மின்சக்திக்கான மகாராஷ்டிரா மின் விநியோக மேம்பாட்டுத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தங்கள் ($500 மில்லியன்); இந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் (¥27,147,200,000, $190.6 மில்லியனுக்கு சமம்), மற்றும் குஜராத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ($109.97 மில்லியன்) ஆகியவை இந்திய அரசின் சார்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளர் ஸ்ரீ சௌரப் சிங்காலும், ADB சார்பாக இந்திய ரெசிடென்ட் மிஷனின் நாட்டு இயக்குநர் திருமதி மியோ ஓகாவாலும் கையெழுத்திடப்பட்டன.
கூடுதலாக, அசாமில் வரவிருக்கும் நிலையான ஈரநிலம் மற்றும் ஒருங்கிணைந்த மீன்வள மாற்றம் (SWIFT) திட்டத்திற்கு செயல்படுத்த ஆதரவை வழங்குவதற்காக, மாநிலத்தின் ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீன்வளத்தை மேம்படுத்துவதற்காக $1 மில்லியன் தொழில்நுட்ப உதவி (TA) மானியமும் கையெழுத்தானது.
நான்கு மாநிலங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களையும், 1 மில்லியன் டாலர் தொழில்நுட்ப உதவி மானியத்தையும் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.
திவாஹர்
