இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் அனைத்து பிரதமர்களின் பாரம்பரியத்தை பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான தேசிய நிறுவனமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அதன் காப்பக வசதிகளை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் உலகின் மிகப்பெரிய அரிய காப்பகப் பொருட்களின் தொகுப்புகளில் ஒன்றாக உள்ளது. இதில் 1,300 – க்கும் கூடுதலான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான 25 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள் உள்ளன. இவை நவீன மற்றும் சமகால இந்திய வரலாற்றைப் படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களால் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அதன் அரிய காப்பக சேகரிப்பு தொடர்பான விரிவான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் ஆவணங்கள், கடிதப் போக்குவரத்து, உரைகள், குறிப்பேடு மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள் ஆகியவை அடங்கும். இது போன்ற முயற்சிகள், ஆராய்ச்சி அறிஞர்களுக்கு தொலைதூர அணுகலை செயல்படுத்தும் அதே வேளையில், ஆவணங்களை நீண்டகாலம் பாதுகாப்பதை உறுதி செய்கிறது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்களின் கணிசமான பகுதி ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பதிவேற்றப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
திவாஹர்
