ஏசிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

அறிவியல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி அகாடமியான ஏசிஎஸ்ஐஆர்-ன் (AcSIR) 9-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (23.11.2025) மத்திய அறிவியல் & தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இந்த ஏசிஎஸ்ஐஆர் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இது இந்தியாவின் மிக முக்கியமான அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இது இந்தியாவின் சிறந்த அறிவியல் திறன்களை ஒன்றிணைக்கும் ஒரு தேசிய மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

திறன் வாய்ந்த இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஈடுபடும் வகையில், கல்வியுடன் தொழில்துறை இணைப்புகளை நோக்கி அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவியல், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமையை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.  அறிவியல் சிந்தனையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் உலகளாவிய போட்டித்தன்மை மையமாக இந்தியா மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஏசிஎஸ்ஐஆர் நிறுவனம் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சி அமைப்புகளில் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து வல்லுநர்களை ஈர்த்து, ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், கூட்டு கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த தளமாக சேவை செய்கிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply