பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினார். அப்போது ஆசியான் அமைப்புத் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றுள்ளதற்காக பிரதமர் திரு இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் ஆசியான் தொடர்பான மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர் வாழ்த்து கூறினார்.
ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் தாம் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்பதில் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“எனது நண்பர் மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினேன். மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்திற்காக அவருக்கு வாழ்த்து கூறி, எதிர்வரும் உச்சிமாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்பதையும் ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும் எதிர்நோக்கியுள்ளேன்.
திவாஹர்
