மடகாஸ்கர் நாட்டின் 65-வது சுதந்திர தினவிழா – இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பங்கேற்பு.

பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் 2025 ஜூன் 25 முதல் 27, வரை மடகாஸ்கரின் அன்டனனரிவோவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் உயர்மட்ட இந்தியக் குழுவும் சென்றது. இந்தப் பயணத்தின் போது, மடகாஸ்கரின் 65-வது சுதந்திர தின விழாவிலும் மலகாசி ஆயுதப் படைகள் உருவாக்கப்பட்ட தின விழாவில் இந்தியா சார்பில் பாதுகப்பு இணையமைச்சர் பங்கேற்றார்.

மடகாஸ்கரின் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் சஹிவேலோ லாலா மோஞ்சா டெல்பினுடன் திரு சஞ்சய் சேத் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி இருவரும் விவாதித்தனர். மடகாஸ்கர் பிரதமர் திரு. கிறிஸ்டியன் நட்சேயை அவர் சந்தித்து, மடகாஸ்கரின் 65வது சுதந்திர ஆண்டு விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்த்துக்களைப் பாதுகாப்பு இணையமைச்சர் தெரிவித்தார்.

அன்டனனரிவோவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த இந்திய சமூகத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்றார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நெருங்கிய நட்பு நாடுகளாகவும், சக வளரும் நாடுகளாகவும், இந்தியாவும் மடகாஸ்கரும் நீண்டகால நட்புறவையும் மக்களுடனான தொடர்புகளையும் பகிர்ந்து கொண்டு வருகின்றன. மடகாஸ்கருடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக பாதுகாப்புத் துறை இணையமைச்சரின் இந்தப் பயணம் அமைந்தது.

Leave a Reply