ராணுவத்தின் புகழ்பெற்ற மரபுகளையும் உணர்வையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவில், அந்தமான் – நிக்கோபார் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தினேஷ் சிங் ராணா, கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவின் 23-வது கர்னலாகப் பொறுப்பேற்றார். இவர், லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணிக்குப் பிறகு இந்தப் பதவியை ஏற்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் லான்ஸ்டவுனில் உள்ள கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவு அலுவலகத்தில், ராணுவ மரியாதைகளுடன், இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடந்தது. இது இந்திய ராணுவத்தின் மிகவும் புகழ்பெற்ற காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றான சாரணர் பட்டாலியன் உட்பட 27 பட்டாலியன்களைக் கொண்ட பெருமைமிக்க மரபைக் கொண்ட பிரிவாகும்.
தமது பதவிக் காலத்தில், லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, படைப்பிரிவு பிணைப்பை வலுப்படுத்தினார். கர்வால் ரைபிள்ஸ் பிரிவில் மிக உயர்ந்த தொழில்முறைத் தரங்களை அவர் நிலைநிறுத்தினார். அவரைத் தொடர்ந்து தற்போது திறமையான அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ராணா, தமது செயல்பாட்டு அனுபவத்தையும் நுண்ணறிவுகளையும் இதில் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
திவாஹர்
