மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, இரண்டு நாள் பயணமாக நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனங்களுக்கு ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். தனது இந்தப் பயணத்தின் போது, ஜான்ஜ்ரா சுரங்கம் மற்றும் சோனேபூர் பசாரி சுரங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் மதிப்பீடு செய்கிறார். அண்மையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் நினைவாக ஜான்ஜ்ராவில் ‘சிந்தூர் பூங்கா’ என்று பெயரிடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை அவர் திறந்து வைக்கிறார். இந்தப் பூங்காவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தின் பிரமாண்டமான கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். புதிதாக கட்டப்பட்ட மஹுதங்கா மறுவாழ்வு மையத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், என்சிடபிள்யூஏ வழிகாட்டுதல்களின்படி கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நியமனக் கடிதங்களை பயனாளிகளுக்கு அவர் வழங்குகிறார். சோனேபூர் பசாரி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அவர் வழங்குகிறார்.
பின்னர் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் திரு கிஷன் ரெட்டி கலந்துரையாடுகிறார்.
எம்.பிரபாகரன்
