கண்காணிப்பு பணிகளுக்கான ஐஎன்எஸ் டெக் கப்பல் மொரிஷியஸின் போர்ட் லூயிஸ் துறைமுகத்துக்கு வருகை.

தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணிகளுக்கான ஐஎன்எஸ் டெக் கப்பல் இம்மாதம் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிஸ் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் மொரிஷியஸ் தேசிய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இணைந்து அந்நாட்டு கடல்சார் பொருளாதார மண்டலத்தில் கூட்டுக் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறது. இந்த கூட்டுக் கண்காணிப்பு கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டவிரோதமாக மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடித்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதையும் உறுதி செய்கிறது. இந்தியப் பெருங்கடல்  பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான இந்திய கடற்படையின் செயல்பாடுகளையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை உதவுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தக் கப்பல் இம்மாதம் 21-ம் தேதி யோகா  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது. இந்த யோகா பயிற்சியில் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய கடற்படையின் மேற்கு படைப்பிரிவின் ரகசிய போர்க்கப்பலான ஐஎன்எஸ், டெக், கடந்த 2012 ஏப்ரல்  27-ம் தேதி கடற்படையுடன் இணைக்ககப்பட்டது.

Leave a Reply