ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் நலனைப்பேண மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது! – மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 11 ஆண்டுகளில் பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் பயணத்தை எடுத்துரைத்ததுடன், ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு இயக்கத்திற்கான வழிகாட்டுதல்களை நேற்று (18 ஜூன் 2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், குறைகளை சரியான நேரத்தில், சிறந்த முறையில் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2025 ஜூலை 1 முதல் 31 வரை ஒரு மாத கால சிறப்பு இயக்கத்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஓய்வூதியத்துறை செயலாளர் (ஓய்வூதியம்) தலைமையில், அதிகாரிகளுடன் 2025 ஜூன் 11 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, நடைபெறும் இயக்கத்தில் தினசரி அடிப்படையில் குறைகளின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் புகார்களில் 25 சதவீதத்திற்கும்  அதிகமானவை தீர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply