நிலக்கரி அமைச்சகம் 200-வது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

மார்வடோலா–II நிலக்கரி சுரங்கத்தை சிங்கால் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து நிலக்கரி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 200-வது நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு என்ற வரலாற்று சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இது நிலக்கரித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நிலக்கரி சுரங்கங்கள் விரைவாக செயல்படும் வகையிலான அமைச்சகத்தின் நடவடிக்கைகள், உற்பத்தி மேம்பாடு, இறக்குமதி குறைப்பு, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

கடந்த பல ஆண்டுகளில், வணிக நிலக்கரிச் சுரங்கத்திற்கு அனுமதி, ஒற்றை-சாளர அனுமதி முறையை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply