பெரிய தீ விபத்துக்குள்ளான எம்வி வான் ஹாய் 503 (MV WAN Hai 503) என்ற சிங்கப்பூர் கப்பலின் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளில், இந்திய கடற்படை நேற்று (ஜூன் 13, 2025) மீட்புக் குழுவுடன் வலுவான வான்வழி முயற்சிகளை மேற்கொண்டது. கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா தளத்தில் இருந்து மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் சென்றனர். சவாலான வானிலை/கடல் நிலைமைகள், தீ புகை சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் கடற்படை ஹெலிகாப்டர் வெற்றிகரமாக அந்த குழு கப்பலில் இறங்கி மீட்புப் பணியில் இணைந்தது. கப்பலின் இழுவை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாரதா கப்பலும், ஓஎஸ்வி எம்வி ட்ரைடன் லிபர்ட்டி என்ற இந்தியக் கப்பலும், இந்திய கடலோர காவல்படையுடனும் பிற கடல்சார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்திய கடற்படையின் இந்த விரைவான செயல்பாடு மீட்பு முயற்சிகளை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.
திவாஹர்
