அகமதாபாத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை  உடனடியாக வழங்க அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் மனவேதனை அளிப்பதாகவும் உள்ளது. இந்த துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த துரயமான தருணத்தில், எனது சிந்தனைகள் யாவும் பாதிக்கப்பட்ட அனைவரையும் குறித்ததாக உள்ளன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறேன்.

Leave a Reply