140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளாலும் அவர்களின் கூட்டான பங்கேற்பாலும் சிறப்பான ஆளுகை, மாற்றம் ஆகியவற்றின் மீது தெளிவான கவனத்துடன் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை இந்தியா பெற்றுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியாவின் வியத்தகு மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

140 கோடி இந்தியர்களின் கூட்டான பங்கேற்பின் மூலம் சிறப்பான ஆளுகை, மாற்றம் என்பதில் தெளிவான கவனம் செலுத்தியது பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்று திரு மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவாகவும், பெருமளவிலும், உணர்வுப்பூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி முதல் சமூக முன்னேற்றம் வரை தமது அரசு மக்களை மையப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்குதல், அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் என்பதற்கு முன்னுரிமை அளிப்பதை திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா தற்போது அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய  முக்கிய குரலாகவும் விளங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

“நமது கூட்டான முயற்சிக்கு பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதை நம்பிக்கையுடனும், புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்துடனும் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகள் ஆக்கப்பூர்வமான பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளன, வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்கப்படுத்தியுள்ளன என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில் மாற்றத்திற்கான பயணத்தை நமோ செயலி மூலம் கண்டறியுமாறு குடிமக்களை திரு மோடி ஊக்குவித்துள்ளார். இது விளையாட்டுக்கள், விநாடி வினாக்கள், கள ஆய்வுகள் உள்ளிட்ட கலந்துரையாடல் வடிவங்களிலும், தகவல் அறிதல், ஈடுபடுதல், ஊக்கம் பெறுதல் ஆகிய வடிவங்களிலும் அரசின் சாதனைகளை முன்வைக்கிறது.

இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை வீடியோக்கள், தகவல் வரைகலைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் கண்டறிய நமோ செயலிக்கும், அதிகாரபூர்வ இணையதளத்திற்கும் வருமாறு பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“சிறப்பான ஆளுகை  மற்றும் மாற்றத்தின் மீது தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது!

140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளாலும், கூட்டான பங்கேற்பாலும் நல்ல நிர்வாகம், மாற்றம் ஆகியவற்றின் மீது தெளிவான கவனத்துடன் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை இந்தியா கண்டுள்ளது.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவாகவும், பெருமளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை தந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி முதல் சமூக முன்னேற்றம் வரை மக்களை மையப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்குதல், அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியா தற்போது அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய முக்கிய குரலாகவும் விளங்குகிறது.

நமது கூட்டான முயற்சிக்கு பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதை நம்பிக்கையுடனும், புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்துடனும் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

#11YearsOfSeva”

“கடந்த 11 ஆண்டுகள் ஆக்கப்பூர்வமான பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளன, வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்கப்படுத்தியுள்ளன.

மாற்றத்திற்கான இந்தப் பயணத்தைக் காண விளையாட்டுக்கள், விநாடி வினாக்கள், கள ஆய்வுகள் உள்ளிட்ட கலந்துரையாடல் வழியாகவும், தகவல் அறிதல், ஈடுபடுதல், ஊக்கம் பெறுதல் வழியாகவும் நமோ செயலி உங்களை அழைத்துச் செல்கிறது.

Leave a Reply