திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்புள்ள 7 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது; இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

வடகிழக்கு பிராந்தியத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தினர்  திரிபுராவில்  பெரிய அளவிலான மெத்தம்பேட்டமைன்  மாத்திரைகள் கடத்தலை முறியடித்தனர்.

28 பட்டாலியன் அசாம் ரைபிள்ஸின் உதவியுடன், அகர்தலா பிராந்திய பிரிவின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், 31.05.2025 அன்று நள்ளிரவு, சந்தேகத்தின் பேரில் ஒரு மாருதி வேகன்-ஆர் காரை வழிமறித்தனர். வடக்கு திரிபுராவின் தர்மநகர் பகுதியிலிருந்து மேற்கு திரிபுராவின் அகர்தலா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, தெலியமுராவின் புறநகரில் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

வாகனத்தைச் சோதனை செய்தபோது,  பானட்டின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏழு செங்கல் அளவிலான பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பொட்டலங்களில் 7 கிலோ எடையுள்ள மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் இருந்தன. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 7 கோடி ரூபாய் ஆகும். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

2025 ஜனவரி முதல், திரிபுராவில் ரூ. 28.74 கோடி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply