15 மே 2025 அன்று 05:29 மணி வரை சிவில் விமானப் போக்குவரத்துக்கு நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 விமான நிலையங்களின் தற்காலிக மூடல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்கள் இப்போது உடனடியாக சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுகின்றன.
பயணிகள் விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு விமானப் போக்குவரத்து நிலையைச் சரிபார்க்கவும், வழக்கமான புதிய தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் வலைத்தளங்களைக் கவனிக்குமாறும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திவாஹர்
