கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 378.04 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 394.28 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 115.55 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 122.16 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 177.50 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 185.51 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 187.36 லட்சம் ஹெக்டேர் பரப்பில் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 188.37 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 27-ம் தேதி நிலவரப்படி கரீப் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடியின் முன்னேற்றம் குறித்த விவரத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
| வ. எண் |
பயிர் | சாகுபடி பரப்பு | |
| 2024 | 2023 | ||
| 1 | நெல் | 394.28 | 378.04 |
| 2 | பருப்பு வகைகள் | 122.16 | 115.55 |
| i | துவரம் பருப்பு | 45.78 | 40.74 |
| ii | உளுந்து | 29.04 | 30.81 |
| iii | பச்சை பயறு | 34.07 | 30.57 |
| iv | குதிரைவாலி | 0.24 | 0.26 |
| v | தட்டைப் பயறு | 9.12 | 9.37 |
| vi | இதர பருப்பு வகைகள் | 3.91 | 3.80 |
| 3 | சிறுதானியங்கள் & மானாவாரி பயறு | 185.51 | 177.50 |
| i | சோளம் | 14.93 | 13.84 |
| ii | கம்பு | 68.85 | 70.00 |
| iii | கேழ்வரகு | 9.17 | 7.63 |
| iv | சிறுதானியங்கள் | 5.34 | 4.78 |
| v | மக்காச்சோளம் | 87.23 | 81.25 |
| 4 | எண்ணெய் வித்துகள் | 188.37 | 187.36 |
| i | நிலக்கடலை | 46.82 | 43.14 |
| ii | சோயாபீன்ஸ் | 125.11 | 123.85 |
| iii | சூரியகாந்தி | 0.71 | 0.68 |
| iv | எள் | 10.67 | 11.58 |
| v | கருப்பு எள் | 0.31 | 0.36 |
| vi | ஆமணக்கு | 4.70 | 7.71 |
| vii | இதர எண்ணெய் வித்துகள் | 0.04 | 0.05 |
| 5 | கரும்பு | 57.68 | 57.11 |
| 6 | சணல் & புளிச்சகீரை | 5.70 | 6.56 |
| 7 | பருத்தி | 111.39 | 122.74 |
| மொத்தம் | 1065.08 | 1044.85 |
திவாஹர்
