நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதே போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , மருத்துவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .
கே.பி.சுகுமார்
