நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்கள்! விரக்தியில் இருக்கும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா.

file photos

மதிமுக துணைப் பொதுச்செயலாளரும், சமூக ஆர்வலரும், திருச்சியை சேர்ந்த பிரபல மருத்துவருமான ரொஹையா மதிமுக சார்பில் திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வமாகவும், நம்பிக்கையுடனும் இருந்து வந்தார். சொந்தச் செலவில் அதற்கான களப் பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.

மதிமுகவின் தலைமையின் சார்பில் எப்படியாவது திருச்சி கிழக்கு தொகுதியை திமுக தலைமையிடம் பேசி பெற்றுவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராக துரை வைகோ இருப்பதால் இந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கினால் அது மதிமுக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துவிடும். ஆழமாக கால் ஊன்றி விடுவார்கள். பின்பு அப்புறப்படுத்துவது சிரமம். ஏற்கனவே திருச்சிராப்பள்ளி மக்களை உறுப்பினர் துரை வைகோ மத்திய அரசுடன் இணக்கமான முறையில் தன்னிச்சையாக செயல்பட்டு தனது தொகுதியில் இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பணிகளை சாத்தியமாக்கி வருகிறார். இது திமுகவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடிந்து விடும். நாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் அல்லது போனால் போகட்டும் என்ற முடிவில் தான் மதிமுகவை திமுக தலைமை டீல் செய்தது. அதற்கான விளைவை தற்போது மதிமுக அனுபவித்து வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மட்டும்தான் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதனால் மதிமுகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் வைகோவின் ஆதரவாளர்களும் மிகுந்த விரக்தியில் இருக்கின்றனர். இவற்றின் விளைவு நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்நிலையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா தனது முகநூல் பக்கத்தில் “சதுரங்க வேட்டை” என்ற தலைப்பில் கீழ்காணும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம்

என் மீது அக்கறை இருப்பது போல் கொஞ்சம் நடியுங்கள் , நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஏமாந்து விடுவேன்

பல துரோகங்களை சந்தித்த பிறகும் நான் உறுதியாக இருக்கிறேன் , யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையை சிறந்தது என்று

இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல ….கொஞ்சம் மனசாட்சியுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு டாக்டர் ரொஹையா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply