சவுக்கு சங்கர் தலைமையில் செயல்பட்டு வரும் சவுக்கு மீடியாவில் பணியாற்றி வரும் மாலதி மற்றும் நித்திஷ்குமார் ஆகிய இருவரையும் மேற்படி நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் 05.01.2026 காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாலதியை ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும், நித்திஷ் குமாரை சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் அவசியம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் மாலதி, நித்திஷ் குமார் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
