அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை மற்றும் சமூக உணர்வின் கொண்டாட்டமாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதில்  குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு, நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான நீடித்த அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.

கண்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள  பிரதமர், இது பல ஆண்டுகளாக அளவிலும் கற்பனையிலும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும், அகமதாபாத்தின் கலாச்சாரச் செழுமை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குஜராத் முதலமைச்சர் வெளியிட்டுள்ள  பதிவிற்குப் பதிலளித்து  திரு மோடி கூறியிருப்பதாவது:

“அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. அதே நேரத்தில், இது நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த மலர்க் கண்காட்சி பல ஆண்டுகளாக அளவிலும் கற்பனையிலும் வளர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது.”

Leave a Reply