வைகோ அரசியலுக்கு மட்டும் வராமல் இருந்திருந்தால் சர்வதேச அளவில் மிகப் பெரிய இலக்கியவாதியாக புகழ்பெற்று இருப்பார்!சமத்துவ நடைப்பயணம்! -பயணத் திட்டம் முழு விவரம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 2026 ஜனவரி 02 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சமத்துவ நடைப்பயணம் நடைபெற இருக்கிறது. திருச்சி முதல் மதுரை வரை நடைபெற இருக்கும் இந்த நடைப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த துவக்க விழாவில் அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

1944 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி கலிங்கப்பட்டியில் பிறந்த வைகோவிற்கு தற்போது 81 வயது ஆகிறது. முதுமை மற்றும் உடல் நலக்குறைபாடு இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்ப்புகளையும் மீறி அவருக்கே உரியப் பிடிவாத குணத்தால் இந்த நடைப்பயணத்தை மிகத் துணிச்சலாக முன்னெடுத்துள்ளார். பாதுகாப்பாக இந்த நடைப்பயணம் அமைய தனிப்பட்ட முறையில் நாமும் வாழ்த்துவோம்.

அரசியல் நிலைப்பாடு குறித்து வைகோ மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு வளமாகும், தமிழ்நாட்டு மக்கள் நலமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர். அரசியலில் அவர் பெற்றதை விட, இழந்தது அதிகம். அவர் தனது வீட்டு அறையில் இருந்த நாள்களை விட, இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் அவர் சிறையில் இருந்த நாள்கள் தான் அதிகம். இவையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.

வை. கோபால்சாமியாக இருந்த காலத்தில் இருந்து அவரைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் நான் சொல்கிறேன். வைகோவின் அறிவுக்கும், திறமைக்கும், பேச்சாற்றலுக்கும் நாட்டின் உயர்ந்த பதவிகளைப் பலமுறை அவர் அலங்கரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைத்தப் போதெல்லாம் அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி அதிகாரப் பதவிகளை துச்சமாக மதித்ததின் விளைவு, இந்த அந்திம காலத்தில் அரசியலில் இவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டிய தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அரசியலில் எப்போதெல்லாம் சரியான முடிவு எடுக்க வேண்டுமோ, அப்போதெல்லாம் தவறான முடிவுகளைத் தொடர்ந்து எடுத்ததின் விளைவு தான் வைகோவின் இத்தகைய நிலைமைக்கு உண்மையானக் காரணம். இதையெல்லாம் பார்க்கும் போது, “நாய்க்கும், பேய்க்கும் நல்ல காலம்; பஞ்சாங்கம் காரனுக்கு பத்தாத காலம்! என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது. சகுனம் சொல்கிற கெவுளி கழனிப் பானையில் விழுந்தக் கதையாக வைகோவின் இன்றைய அரசியல் வாழ்க்கை இருக்கிறது என்பதை இங்கு நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஏனோ தெரியவில்லை 50 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் வாக்கு அரசியல் மட்டும் வைகோவிற்கு இன்றுவரை வசப்படாமலேயே போய்விட்டது. என்றைக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தல் நடைபெறுகிறதோ அன்றுதான் வைகோ போன்ற நபர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியும். வைகோவிற்கு ஏற்பட்ட இத்தகைய நிலைமை இனி வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. இனிவரும் காலங்களிலாவது தேர்தல் நேரங்களில் நல்லவர்களை மக்கள் அடையாளம் கண்டு அங்கீகரித்து ஆதரவு அளிக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம்.

வைகோ அரசியலுக்கு மட்டும் வராமல் இருந்திருந்தால் சர்வதேச அளவில் மிகப் பெரிய இலக்கியவாதியாக புகழ்பெற்று இருப்பார். ஆம், நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்கு வின்ஸ்டன் சர்சில் என்ற வரிசையில் வைகோவின் பெயரும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். என்ன செய்வது? விதி யாரை விட்டது?

நாள்:02.01.2026 காலை 9:30 மணி

புறப்படும் இடம்: உழவர் சந்தை, தென்னூர் திருச்சி

வழி: அண்ணா நகர் கோர்ட் ரோடு. மேஜர் சரவணன் ரவுண்டானா. மத்திய பேருந்து நிலையம். அரிஸ்டோ மேம்பாலம். கிராபட்டி மேம்பாலம். எடமலைப்பட்டி புதூர் வழியாக ஏ.கே.தம்பியப்பா மகால் வந்தடைதல்.

மாலை 4:30 புறப்படுதல்: எடமலைப்பட்டி புதூர்

வழி: மதுரை ரோடு பஞ்சப்பூர், கிரிஸ்டல் கன்வேஷன் ஹால் (இரவு தங்கல்)

03.01.2026 புறப்படுதல் : பஞ்சப்பூர் (திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்)

வழி: திருவக்குடி, மட்டப்பாறைப்பட்டி விலக்கு, மணிகண்டம் ஒன்றிய அலுவலகம், தீரன் மாநகர், அண்ணாநகர் விலக்கு, நாகமங்கலம் (மதிய இடைவேளை)

புறப்படுதல் மாலை 4:30 மணி : நாகமங்கலம்

வழி: சக்தி நகர் விலக்கு அளூந்தூர் பள்ளப்பட்டி விலக்கு சூரக்குடிப்பட்டி விலக்கு அரசினர் பொறியியல் கல்லூரி ஃபாத்திமா நகர் ஏரக்குடி பாரதி கலை கல்லூரி (இரவு தங்கல்)புதுக்கோட்டை மாவட்டம்

04.01.26 காலை 7:00 மணி புறப்படுதல் :பாரதி கலைக் கல்லூரி

வழி: இடையபட்டி, எரசநாயக்கன்பட்டி டோல் கேட், புதுப்பட்டி விலக்கு, வேலூர் சமத்துவபுரம், விராலிமலை நுழைவு, விவேகா மெட்ரிக் பள்ளி (பகல் உணவு)

புறப்படுதல் மாலை 4: 00 : விவேகா மெட்ரிக் பள்ளி

வழி: மதுரை ரோடு கடை வீதி, கீழரத வீதி, விராலிமலை (பொதுக்கூட்டம்)

இரவு தங்கல் – தூரம் : 4.5 கிமீ

05.01.2026 காலை 7 : 00 மணி புறப்படுதல்: விராலிமலை

வழி: விராலூர், கொடிக்கால் பட்டி விலக்கு, அரச கொடிப் பட்டி விலக்கு, களப்பனூர் விலக்கு, வடக்காட்டுப்பட்டி விலக்கு, கொடும்பாளூர், சத்திரம் (மதிய உணவு) திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்

புறப்படுதல் மாலை 4:00 மணி : கொடும்பாளூர் சத்திரம்

வழி: வாடியா குப்பம், லஞ்சமேடு, கோவில்பட்டி, மினிக்கியூர் விலக்கு, வலசுப்பட்டி விலக்கு, சென்னக்கல், வளநாடு கை காட்டி (இரவு தங்கல்)

06.01.2026 காலை புறப்படும் இடம்: வளநாடு கைகாட்டி

வழி: கல்லா மேடு, பழவஞ்சி, முத்தாழ்வார்பட்டி, யாகபுரம்.

சேரும் இடம்: செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி

பிற்பகல் புறப்படும் இடம்: செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி

வழி: துவரங்குறிச்சி நுழைவு,

சேரும் இடம்: துவரங்குறிச்சி நகரம் (பொதுக்கூட்டம்) – 7.5 கி.மீ.

07.01.2026 காலை புறப்படும் இடம்: துவரங்குறிச்சி ( திருச்சி புறநகர் தெற்கு)

வழி: அரசு போக்குவரத்து கழக பணிமனை, சடவேலம்பட்டி விலக்கு, அதிகாரம், சிவந்தாம்பட்டி, மருதம்பட்டி, புழுதிபட்டி (சிவகங்கை) நாகமங்கலம்

சேரும் இடம் : நாகமங்கலம் நாகம்மாள் கோயில் பகல் உணவு

பிற்பகல் புறப்படும் இடம்: நாகமங்கலம் ( மதுரை புறநகர் வடக்கு)

வழி: புதுப்பட்டி, வெள்ளமலைபட்டி, பள்ளப்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, கொட்டாம்பட்டி

சேரும் இடம் : கொட்டாம்பட்டி (இரவு தங்கல்)

08.01.2026 காலை புறப்படும் இடம் : கொட்டாம்பட்டி

வழி: சிங்கம்புணரி பிரிவு, கல்லம்பட்டி பிரிவு, காடம்பட்டி பிரிவு,

சேரும் இடம்: கருங்காலக்குடி பகல் உணவு (சேது மஹால்)

பிற்பகல் புறப்படும் இடம்: கருங்காலக்குடி

வழி: குன்னங்குளப்பட்டி, வஞ்சிநகரம்,

சேரும் இடம்: கச்சராயன்பட்டி (இரவு தங்கல்)

09.01.2026 காலை புறப்படும் இடம்: கச்சராயன்பட்டி

வழி: மணப்பட்டு விலக்கு, தும்பப்பட்டி, தாமரைப்பட்டி, சாளக்கிபட்டி

சேரும் இடம்: சத்தியபுரம் (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம்: சத்தியபுரம்

வழி: நான்கு வழி சாலை, மேலூர் நுழைவு கடைவீதி

சேரும் இடம்: மேலூர் (பொதுக்கூட்டம்) இரவு தங்கல்

10.01.2026 காலை புறப்படும் இடம்: மேலூர் ( மூவேந்தர் மண்டபம் அணிவகுப்பு)

வழி: புறவழிச்சாலை, சூரக்குண்டு, விநாயகபுரம்

சேரும் இடம்: தெற்கு தெரு (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம்: தெற்கு தெரு

வழி: அரிட்டாபட்டி, டோல்கேட்,

சேரும் இடம்: சிட்டாம்பட்டி (இரவு தங்கல்)

11.01.2026 காலை புறப்படும் இடம்: சிட்டாம்பட்டி

வழி: கொடிக்குளம் விலக்கு, காயம்பட்டி, அரசு வேளாண்மைக் கல்லூரி

சேரும் இடம்: ஒத்தக்கடை (பகல் உணவு எஸ்.எஸ். மகால்) – 06 கி.மீ.

மாலை புறப்படும் இடம் : ஒத்தக்கடை (எஸ்.எஸ். மகால்)

வழி: உயர் நீதிமன்றம்

சேரும் இடம்: உத்தங்குடி ( ஜெ.எப்.ஏ.லக்கி மகால்) – 05 கி.மீ.

12.01.2026 காலை புறப்படும் இடம் : உத்தங்குடி ( ஜெ.எப்.ஏ. லக்கி மகால்)

வழி: மீனாட்சி மருத்துவமனை, மாட்டுத்தாவணி, கே.கே. நகர், அப்போலோ மருத்துவமனை

சேரும் இடம்: அண்ணா நகர் (பகல் உணவு)

மாலை புறப்படும் இடம் : அண்ணா நகர்

வழி : தெப்பக்குளம், காமராசர் சாலை, தினமணி டாக்கிஸ் ரோடு, கீழ வெளி வீதி, அம்மன் சன்னதி

சேரும் இடம்: ஓபுளா படித்துறை நிறைவு பொதுக்கூட்டம்

Leave a Reply