திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அப்போலோ மருத்துவமனை எதிரில் இன்று (டிசம்பர் 25) மாலை 4 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக காவல் துறைக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் போலீஸ் வரும் வரை காத்திருக்காமல் அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் சாலையின் நடுவே கிடந்த அந்த நபரை மீட்டு சென்ட்ரல் மீடியத்தில் வைத்து; முதலில் வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
கார் விபத்தில் பலியான அந்த நபர் பெயர் ஜான் கென்னடி என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் லோடுமேனாக வேலை செய்து வந்ததும், இவர் திருச்சி, அரியமங்கலம், ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதிய காரும், அந்தக் கார் ஓட்டுனரும் தப்பி செல்ல முயற்சிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
