காவலர் குடியிருப்புக்குள் இளைஞர் வெட்டிக்கொலை! -திருச்சி பீமநகரில் நடந்த கொடூரம்.

பீமநகரில் உள்ள காவலர் குடியிருப்பில், தாமரைச்செல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலைகாரர்கள் அவரை ஓட ஓட விரட்டி, கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

வெட்டுக்காயமடைந்த இளைஞர், தப்பிக்க காவலர் குடியிருப்புக்குள் தஞ்சம் புகுந்ததாகவும், ஆனாலும் அங்கு வைத்து அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தக் கொலைக்கான உண்மையானக் காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான மு க ஸ்டாலின் திருச்சியில் முகாமிட்டுள்ள இத்தருணத்தில் பட்டபகலில் இந்த படுகொலை நடந்திருப்பது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உளளது.

Leave a Reply