நவம்பர் 2 முதல் 4 வரை குடியரசுத் தலைவர் உத்தராகண்டிற்கு பயணம்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நவம்பர் 2 முதல் 4, 2025 வரை உத்தரகாண்டிற்கு வருகை தருகிறார்.

நவம்பர் 2 ஆம் தேதி, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார்.

நவம்பர் 3 ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழாவையொட்டி, டேராடூனில் உள்ள உத்தரகண்ட் சட்டமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். அதே நாளில், நைனிடாலில் ராஜ்பவன் நிறுவப்பட்ட 125 ஆண்டுகளைக் குறிக்கும் விழாவில் அவர் கலந்து கொள்வார்.

https://www.facebook.com/share/r/1P75MPJjdo/

Leave a Reply