https://www.facebook.com/share/r/1DCiZi74oz
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக வெங்கடேஸ்வரர் கோவிலில் ஏகாதசி திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்று (01/11/2025 சனிக்கிழமை) ஏகாதசியையொட்டி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதலமைச்சர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக வெங்கடேஸ்வரா கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துரதிர்ஷ்டவச சம்பவத்தில் பக்தர்கள் மரணம் மிகவும் சோகமானது. துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்குச் சென்று போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
–Dr. Durai Benjamin
Editor and Publisher, www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
WhatsApp : 9842414040
