கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தார், தவெக தலைவர் விஜயை சந்திப்பதற்காக தனியார் பேருந்துகள் மூலம் இன்று சென்னை புறப்பட்டனர். அவர்களை மாமல்லபுரத்தில் நாளை (அக்டோபர் 27) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.
இந்த துயரச் சம்பவம் நடந்து இன்றோடு முப்பது நாட்கள் ஆகியும் தவெக தலைவர் விஜய், உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தாரை கரூரில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு உரிய இடமும், பாதுகாப்பானச் சூழலும், அதற்கான காவல்துறை அனுமதியும் இந்த நிமிடம் வரை கிடைக்காதக் காரணத்தால், விஜய் மற்றும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேறு வழியின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
