மதிமுகவை புறக்கணித்த மதிவதனி! -மதிமுக துணைப் பொதுசெயலாளர் மருத்துவர் ரொஹையா கண்டன அறிக்கை.

மதிவதனி,
திராவிட கழகத் துணைப்பொதுசெயலாளர்.

திராவிட கழகத்தின் துணைப்பொதுசெயலாளர் தோழர் மதிவதனி ஒரு தொலைகாட்சி விவாதத்தில் உரையாற்றியதை இணையத்தில் பார்த்தேன்.

மருத்துவர் ரொஹையா, மதிமுக துணைப்பொதுசெயலாளர்.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பற்றி பேசும்பொழுது, காங்கிரஸ் விசிக சிபிஎம் சிபிஐ இஸ்லாமிய கட்சிகள் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஒருபோதும் அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டார்கள் என்று எதோ பேசிகிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியை திட்டமிட்டு தவிர்த்தது யாருடைய அஜென்டா ? இது மதிவதனியின் தனிப்பட்ட கருத்தா அல்லது திராவிட கழகத்தின் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களின் ஒப்புதல் பெற்ற கருத்தா என தெரியவில்லை.

தமிழக அரசியல் களத்தில் மதிமுக தவிர்க்க முடியாத கட்சி என்று அய்யா வீரமணி அவர்களுக்கு நன்கு தெரியும்.

தோழர் மதிவதனி நன்றாக மேடையில் பேசிகிறார் என்று இணையத்தில் அவரை அளவுக்கு அதிகமாக தூக்கிப்பிடித்தவர்கள் மதிமுக தோழர்கள் என்பது உண்மை.

திமுக கூட்டணியில் விசிக வை தவிர்த்து மதிவதனி பேசி இருந்தால் … பேசமாட்டார் …அவர் அப்படி பேச பயப்படுவார் என்பதுதான் உண்மை.

மதிமுக தோழர்களுக்கு நான் சொல்வது ஏன் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க………முடியல.

இவ்வாறு மதிமுக துணைப் பொதுசெயலாளர் மருத்துவர் ரொஹையா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply