புதிதாக துவங்கப்படும் அரசியல் கட்சிகளை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டுமானால், கட்சி துவங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் இரு தேசிய நாளிதழ்கள் மற்றும் இரு உள்ளூர் நாளிதழ்களில் இரண்டு நாட்களுக்கு புதிய கட்சியின் பெயர் குறித்து பொது அறிவிப்பை விளம்பரமாக வெளியிட வேண்டும். புதிய கட்சிக் குறித்து ஆட்சேபனை இருப்பவர்கள், பொது அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த 30 நாட்கள் கால அவகாசம் என்பதை 7 நாட்களாக குறைத்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
