வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்பேரணியின் போது டெல்லி செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது வெடித்த வன்முறையில் போலீஸார் மற்றும் விவசாயிகள் என இரு தரப்பினரும் தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்த நிலையில், டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட சதி திட்டத்தோடு, விவசாயிகள் அல்லாத மர்ம நபர்கள் பலர் ஊடுருவியதால்தான் வன்முறை உருவானது என, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இரும்பு கம்பிகளால் ஆன வலுவான கான்கிரீட் தடுப்பு சுவர்களை சாலைகளின் குறுக்கே அமைத்துள்ளனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

கார்பரேட் அரசியல் நடைபெறும் போது வேறு என்ன எதிர்பார்க்க முடியும்…. இதுதான் மோடி ஆட்சியின் நிலை….. இந்திய அரசின் வெட்க கேடான நிலை/ இயலாமை. எதிரி நாடுகளிடம் காட்ட வேண்டிய வித்தைகளை சொந்த மண்ணின் விவசாய மைந்தர்களிடம் காட்டுகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு……