இலங்கையில் கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்தல்!- 4 பேர் கைது.

இலங்கை, நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 04 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ .600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அனைத்து உளவுத்துறை சேவைகள் மற்றும் போலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாபம் தொடுவாவ பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply