பயணிகளுக்காக காத்திருக்கும் அரசு பேருந்துகள்..!-கொரோனா பயத்தில் இருக்கும் பொதுமக்கள்..!

இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.09.2020) காலை 10.45 மணிக்கு எடுக்கப்பட்டவை.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இன்று முதல் இ-பாஸ் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பேருந்துகளை இயக்கினால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தனியார் பேருந்து முதலாளிகள் கை விரித்து விட்ட நிலையில், பொது மக்களின் நலன் கருதி இன்று காலை முதல் நகர மற்றும் புறநகர் அரசு பேருந்துகளை, தமிழக அரசு இயக்க துவங்கியுள்ளது.

ஆனால், கொரோனா தொற்று பயத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தயங்கி வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply