சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தயாரிப்புச் சட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம் திருவாரூர் ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்றது.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தயாரிப்புச் சட்ட கண்காணிப்பு குழுக் கூட்டமானது திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இல. நிர்மல் ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தயாரிப்புச் சட்டம் 2003 பிரிவு 5-ன் படி விதி மீறல்களை கண்காணிக்கவும், நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களைத் தடுக்கவும் கண்காணிப்பு  குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழு மூலம் இம்மாவட்டத்தில்  2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல்  மே மாதம் வரையில் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தயாரிப்புச்சட்டப் பிரிவுகளின்படி சட்டத்தை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ.86 ஆயிரம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையினரால் உரிய அபராதம் விதிக்கப்படும். எனவே மாவட்டத்தை புகையிலை பாதிப்பில்லாத மாவட்டமாக தக்க வைத்துக் கொள்ள அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் லூயிஸ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

– ஜி. ரவிச்சந்திரன்.

Leave a Reply