தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு  டிரான்ஸ்பாண்டர்களை வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply