தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் பண்ணைகள் அமைப்புக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது!-மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தகவல்.

தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் பண்ணைகள் அமைப்புக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. சஞ்சீவ் பல்யான் புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தேசிய கோகுல் இயக்கத்தின் சார்பாக ரூ. 4 கோடி/ ஒரு கோடி ரூபாய்/ ரூ. 60 லட்சம்/ ரூ. 50 லட்சம் முறையே பசு/ எருமை/ பன்றி/ கோழி/ ஆடு ஆகியவை வளர்ப்புக்கு மானியமாக அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தத் தொகையில் 50 சதவீதம் மத்திய அரசு மாநியமாகவும், மூன்று சதவீதம் வட்டிச்சலுகையாகவும் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும், 4332 நகரும் கால்நடை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் நாட்டு மாடுகள் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த அமைச்சகத்தில் மொத்தமுள்ள 90,598 வேலைகளில் 16 ஆயிரம் இளைஞர்கள் மைத்ரி திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் இளைஞர்கள் பலன்களை பெறும் வகையில் ஆன்லைன் வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த 8 ஆண்டுகளில் கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு, சுகாதாரம், அறிவியல் ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு தேவையான வசதிகளை இந்த அரசு செய்து வருவதாகவும், இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கப்படுவது இந்தியாவின் எதிர்காலத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கு சமமாகும் என தெரிவித்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply