இந்திய கைவினைத் திறனின் உயர் தரத்தை உலகிற்கு வெளிக்காட்டும் விதமாக குடிசைத் தொழில் பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு

இந்திய கைவினைத் திறனின் உயர் தரத்தை உலகிற்கு வெளிக்காட்டும்  விதமாக குடிசைத் தொழில் பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு மாவட்டம்,  ஒரு பொருள் என்ற கொள்கையின் கீழ், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களின் உயர்ந்த பாரம்பரியத்தை இந்த குடிசைத்தொழில் பல்பொருள் அங்காடியில் உள்ள பொருட்கள் பறைசாற்றுகின்றன. ஜவுளித்துறையின் கீழ், அமையப்பெற்றுள்ள மத்திய குடிசைத் தொழில்கள் பல்பொருள் அங்காடியை மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த குடிசைத் தொழில்கள் பல்பொருள் அங்காடியை மேம்படுத்தி, வணிகத்தை உயர்த்த தனியார் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு கோயல் தெரிவித்தார்.

இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் கலைஞர்களை உலக அளவில் கொண்டு செல்ல சிறந்த, நவீன  மற்றும் வாய்ப்பளிக்கும் தளத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  

திவாஹர்

Leave a Reply