மத ரீதியிலான தடைகளைத் தாண்டி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பொது மக்கள் பங்களிக்குமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒவ்வொரு இந்திய ராணுவ வீரர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரிடமும் மிகுதியாகக் காணப்படும் நம் நாடு குறித்த தேசியப் பெருமை மற்றும் தேசபக்தியின் பண்புகளை பின்பற்றி மத ரீதியிலான தடைகளைத் தாண்டி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.

2022 , அக்டோபர் 16ஆம் தேதி, ‘மாருதி வீர் ஜவான் டிரஸ்ட்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாகிகளுக்கான கவுரவம் என்ற பொருள்படும் ‘ஷாஹீதோன் கோ சலாம்’ நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார். ஆயுதப்படை வீரர்கள் பிராந்தியம், மதம், சாதி மற்றும் மொழி ஆகியவற்றின் தடைகளைத்தாண்டி மேன்மை அடைந்து வருவதாக அவர் கூறினார்.

”தாய்நாட்டிற்கு தன்னலமின்றி சேவை செய்து, பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள், அதே போல் நமது புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வீரர்களின் இலட்சியங்களையும், தீர்மானங்களையும் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கையான ‘புதிய இந்தியாவை’ உருவாக்குவதில் தங்கள் பங்கை ஆற்றுங்கள்,” என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்,

எம்.பிரபாகரன்

Leave a Reply