கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு நெஞ்சு வலி!-காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இலங்கை கடற்படை வீரர்கள்.

இலங்கை மீன்வள மற்றும் நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளிடமிருந்து, கொழும்பில் உள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு இன்று (ஆகஸ்ட் 03, 2020) வந்த அவசர தகவலையடுத்து, காலி துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார் 50 கடல் மைல் (92 கி.மீ) தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களில் ஒருவருக்கு திடீரென ‘நெஞ்சு வலி’ ஏற்பட்டு துடித்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் அங்கு நெஞ்சு வலியால் துடித்த நோயாளியை மீட்டெடுத்து, அவரை காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தி, பாதுகாப்பு உடைகள் அணிவித்து, முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கராபிட்டி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

நெஞ்சு வலியால் துடித்த அந்த மீனவர், பெருவாலாவில் வசிக்கும் நபர் என்றும், 2020 ஜூலை 29 ஆம் தேதி காலி மீன்வளத் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார் என்பதும், தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN August 3, 2020 10:40 pm

Leave a Reply