பசுவின் சாணம் மற்றும் கோமியத்தால் கிருமி ரோகம் மற்றும் சகல விஷங்களும் தீரும்! -ஆதாரப்பூர்வமான மருத்துவ விளக்கம்.

Dr.துரைபெஞ்சமின், மருத்துவ சுவடிகள் ஆய்வாளர், Ex. Honorary A.W.Officer, Govt Of India.

பசுவின் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் மருத்துவ குணம் குறித்து, உலகம் முழுவதும் பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் மற்றும் பல்வேறு தேவையில்லாத விமர்சனங்களும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

மேலும், ஒரு சிலர் பசுவின் சாணம் மற்றும் பசுவின் மூத்திரத்தை ஒரு மதப்பிரச்சனையாகவே கருதி, அதை ஒரு தீண்டத்தகாத பொருளாக சித்தரித்து வருகின்றனர்.

பன்றியின் கொழுப்பை கூட மருந்தாகப் பயன்படுத்தும் மக்கள், பசுவின் சாணம் மற்றும் பசுவின் மூத்திரத்தைக் கண்டு முகம் சுழிப்பது நமக்கு வியப்பாக இருக்கிறது.

இந்நிலையில், மேற்காணும் வதந்திகளுக்கும், இது குறித்த தேவையில்லாத பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இந்த ஆதாரப்பூர்வமான மருத்துவ ஆய்வுக் கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளோம்.

ஆம், பசுவின் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் ஆகியவற்றின் உண்மையான மருத்துவ குணம் என்ன? மற்றும் அவற்றின் பயன்பாடு என்ன? அதில் எந்தெந்த நோய்களையெல்லாம் குணமாக்கும் சக்தி இருக்கிறது?! அதை எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

பசுவின் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் குறித்து பண்டைய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ நூல்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளன? என்ற விபரத்தையெல்லாம் ஆராய்ந்து, உலக மக்களின் நன்மைக்காகவும், நமது வாசகர்களின் பார்வைக்காகவும் இதை இங்கு பதிவு செய்துள்ளோம்.

பசுவின் சாணம்.

பசுவின் சாணம் ( Cow’s Dung )

                        ஆவினது சாண மடிபடுவீக் கம்முதிரத்
                        தான் வருகிருமி சார்ந்தகப – மேவுசுரந்
                        தங்குந்தா கம்பொக்குஞ் சாற்றின்மெய்ச் சுத்திபால்
                        தெங்கின்பா லுக்கொக்குந் தேர்.

குணம் :

பசுவின் சாணம், கல் முதலியவைகளால் அடிப்பட்ட வீக்கம், ஒழுகுகின்ற உதிரம், கிருமிரோகம், கபசுரதாகம், இவைகளை நீக்கும். தேகசுத்தி உண்டாக்கும். இது தெங்கின் பாலை ஒக்கும் என்க.

விளக்கம்:

அதாவது பசுவின் சாணமானது, அடிப்பட்ட வீக்கத்தை குணமாக்கும், ஒழுகுகின்ற இரத்தப் போக்கை குணமாக்கும், கிருமிகளின் தொற்றால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். கபம், காச்சல் (ஜ்வரம்), வறட்சி (தாகம்) இவைகளை நீக்கும், உடல் உறுப்புகள் அனைத்தையும் சுத்தம் செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது தென்னை பாலைக்கு சமமானது.

உபயோகிக்கும் முறை : –

பசுவின் சாணம், பால், தயிர், நெய், நீர் இவைகளை கூட்டிய “பஞ்ச காவியம்” சில வேளை உட்கொள்ள, இதனால் தேகத்தில் உள்ள மாசுக்களை நீங்கி சுத்தி பெறும்.

மேலும், அடிபட்ட இடங்களில் பசுவின் சாணத்தை தண்ணீர் (சலம்) விட்டு கரைத்து, கொதிக்க வைத்து தாளக்கூடிய சூட்டில் மேல் பற்றுப்போட விரைவில் வீக்கம் கரையும் நோய் தணியும்.

செய்கை : – சோபாநசினி,  இரத்தஸ்தம்பனகாரி.

 __________________________________________

பசுவின் மூத்திரம்.

 பசுவின் மூத்திரம் (Cow’s Urine)

                         விடபாண்டு சோபைபல வீக்கஞ் சகல
                        விடமுதிர மாலையென மெத்தப் – புடவிதனிற்
                        பேசலக்க ணேடுதந்தப் பீடையும் நன்றிடுமே
                        கோசலத்தா லாரணங்கே கூறு.

 குணம் :

கோசலத்தால் விஷபாண்டு, சோபை, பற்பல வீக்கம், சகல விஷம், அசிர்க்கு, காமாலை, பன்னோய் முதலிய பிணிகள் போம் என்க.

விளக்கம்:

அதாவது பசுவின் மூத்திரத்தால் (சிறுநீரால்) அனைத்து வகையான விஷங்களும் தீரும், இரத்த சோகை, இரத்தப்போக்கு, உடலில் உச்சி முதல் பாதம் வரை  பல்வேறு உறுப்புகளில் ஏற்படக்கூடிய வீக்கம், காமாலை, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற பல நோய்கள் தீரும்.

உபயோகிக்கும் முறை : –

பசுவின் மூத்திரத்தை மூன்று முறை நன்றாக வடிகட்டி, வேளைக்கு 1 அவுன்ஸ் வீதம், தினம் 2 வேளை கொடுத்துவர பெருவயிறு, காமாலை, நீர்ப்பாண்டு, குன்மம், மகோதிரம், முதலியவைகள் குணமாகும். இன்னும் இதனை அந்தந்த ரோகங்களுக்கு உரித்தான அனுபானங்களில் கலந்துக் கொடுக்கலாம்.

இதனை சொறிசிரங்கு, கரப்பான் முதலியவற்றிற்கு சிறிது பசுவின் சாணத்துடன் கரைத்து மேற்பூசிச் சிறிதுநேரம் சென்றபின் சுத்தமாக அலம்பிவிட விரைவில் குணமாகும்.

செய்கை : –  மூத்திர வர்த்தனக்காரி, விஷ நாசகாரி. 

-Dr.துரைபெஞ்சமின்,
மருத்துவ சுவடிகள் ஆய்வாளர்,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN April 7, 2020 6:43 pm

Leave a Reply