இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் 41 சாக்கு மூட்டைகளில் 1547.68 கிலோ கிராம் புகையிலை பறிமுதல்

இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (மார்ச் 22) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 41 சாக்கு மூட்டைகளில் 1547.68 கிலோ கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக புகையிலை கொண்டு வர முயற்சித்த தலைமன்னார், ஊறுமலை பகுதியில் வசிக்கும் 28, 30 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க 3 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 1 திருநங்கை உட்பட மொத்தம் 226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
டிடிவி. தினகரன் அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!

Leave a Reply