இலங்கையில் 912.46 கிலோ பீடி இலை, 150 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

நேற்று இரவு (மார்ச் 20) தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து 5 கடல் மைல்கள் தூரத்தில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 912.46 கிலோ பீடி இலைகளை, இலங்கை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.  இது சம்மந்தமாக 32 மற்றும் 38 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல் உருமலை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான சாக்குகளில் 150 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.
மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பட்டியல்.

Leave a Reply