இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக வெளியேற முயற்சித்த 30 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடல் பகுதியில் மார்ச் 07 –ந்தேதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, காலி கலங்கரை விளக்கிலிருந்து 80 கடல் மைல்கள் தூரத்தில், சந்தேகத்திற்கிடமாக பயணித்த ஒரு கப்பல் இலங்கை கடற்படையினரினால் கண்காணிக்கப்பட்டது. அதன்படி சட்ட விரோதமாக இலங்கையை விட்டு கடல் வழியாக வெளியேற முயற்சித்த 30 ஆண்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்ய்ப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

சோதனை செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் போர் விமானங்கள்!-தீவிரவாத அரசியல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றம் சுமத்தும் ஊடகங்கள்!
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா!

Leave a Reply