கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தி வந்த ஈழத்தமிழர் கைது!

கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தி வந்த ஈழத்தமிழர் ஒருவரை, இலங்கை கடற்படை வீரர்கள் பருத்தித்துறைக்கும் வடக்கே கடல் பகுதியில் வைத்து இன்று (27 பிப்ரவரி) காலை கைது செய்துள்ளனர். அவர் படகில் 2 சாக்கு மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 86.4 கிலோ கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு மாதத்திற்குள் 442.2 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை 06 தனித்தனி சந்தர்ப்பங்களில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் கூண்டோடு இடமாற்றம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல்! -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

Leave a Reply