இலங்கை கடற்படையினரால் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் காரைதீவு மற்றும் டெல்ப் தீவு பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (20 பிப்ரவரி) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 படகுகளும் மற்றும் மீன்படி உபகரணங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

 

கரூரில் நடைபெற்ற புதிய அரசியல் கட்சித் தொடக்க விழாவில் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Leave a Reply